மதுரை | மகளை காதலித்த இளைஞனை வெட்டி தண்டவாளத்தில் போட்ட தந்தை! - Seithipunal
Seithipunal


மதுரை : தெற்கு வாசல் பாலம் அருகே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத வெட்டி கொலை செய்யப்பட்ட ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், அந்த ஆண் சானலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், ஆண் சடலம் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட அந்த நபர் தூத்துக்குடி விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த கணபதி ராஜா என்பது தெரிய வந்தது.

மேலும் போலீசாரின் விசாரணையில், மதுரை ஜெய்ஹிந்த் புரம் பகுதியில் கணபதி ராஜா ஓட்டுனராக பணிபுரிந்து வந்ததாகவும், அப்போது மாயழகு என்பவரின் 19 வயது மகளை கணபதி ராஜா காதலித்து வந்ததாகவும் தெரிய வந்தது.

இதனை அடுத்து போலீசார் விசாரணையை தீவிர படுத்திய நிலையில்,  தன் மகளை காதலிக்க கூடாது என்று கணபதி ராஜாவை மாயழகு அன்பாக கேட்டு பார்த்துள்ளார்.

ஆனால், கணபதி ராஜா அதற்க்கு மறுப்பு தெரிவிக்கவே, தன் இரு மகன்களுடன் சேர்ந்து கணபதி ராஜாவை மாயழகு கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. இதனையடுத்து மூன்று போரையும் கைது செய்த போலீசார் மேலும் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

madurai love issue murder case 2023


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->