தமிழை வளர்க்க அனைத்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும் - மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்டாலின் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது,

"மதுரையில் உள்ள உலக தமிழ்ச்சங்க நூலகத்தில் தமிழ் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து நூல்களும் வைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர உத்தரவிட வேண்டும்" என்று மனுதாரர் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் இந்த மனு இன்று நீதிபதிகள் மகாதேவன் மற்றும்  சத்யநாராயண பிரசாத் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நூலகத்தில் தமிழ் மொழியை வளர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அதற்கான நிதியை ஒதுக்கி சங்ககால தமிழ் இலக்கியம் குறித்தும், நவீன கால தமிழ் இலக்கியம் குறித்தும் பிரபலப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்வுகளை முன்னெடுக்க வேண்டும்" என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madurai high court order to tn govt for World Tamil Association Library basic facility


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->