#Breaking :: கோவில்களில் செல்போன் பயன்படுத்த தடை..! ஆடை கட்டுப்பாடும் கொண்டு வரலாம்..!! உயர் நீதிமன்றம் அதிரடி..!!
Madurai High Court Bans Use of Cell Phone in Hindu Temples
தமிழகத்தில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து இந்து கோயில்களிலும் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோயிலைத் தொடர்ந்து அனைத்து கோயில்களிலும் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்யநாராயண பிரசாத் அமர்வு இந்து சமய அறநிலை துறை ஆணையருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அந்த உத்தரவில் "இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். கோயில் வளாகத்தில் செல்போன்களை வைக்க பாதுகாப்பு அறை ஏற்பாடுகள் செய்ய வேண்டும். ஹிந்து கோயில்களின் மாண்பை பாதுகாக்கும் வகையில் ஆடைகளிலும் கட்டுப்பாடுகள் கொண்டு வரலாம்" என நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்
English Summary
Madurai High Court Bans Use of Cell Phone in Hindu Temples