ஜாமின் நிபந்தனைகளை தளர்த்த முடியாது.! எஸ்.ஜி சூரியாவின் தலையில் கொட்டிய நீதிமன்றம்.!! - Seithipunal
Seithipunal


மதுரை தொகுதி எம்பி வெங்கடேசன் குறித்தும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்தும் தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் அவதூறு கருத்துகளோடு அறிக்கை வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை மாநகர காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த மதுரை சைபர் கிரைம் போலீசார் சென்னையில் வைத்து எஸ்.ஜி சூர்யாவை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி சூர்யாவுக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. அந்த ஜாமீன் உத்தரவில் 30 நாள்களுக்கு தினமும் காலை 10 மணிக்கு மதுரை சைபர் கிரைம் போலீஸ் முன்னிலையில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.

இந்த ஜாமீன் நிபந்தனையை தளர்த்த கோரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி சூர்யா மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் உடல் நல குறைவு காரணமாக ஜாமீன் நிபந்தனையை தளர்த்த வேண்டும் எனவும், ஜாமீனுக்கு கையெழுத்து போடுவதை சென்னைக்கு மாற்ற செய்யக் கோரியும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த மதுரை மாவட்ட நீதிபதி பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி சூர்யாவின் மனுவை தள்ளுபடி செய்ததோடு உறுதி செய்து உத்தரவிட்டுள்ளார். இதனால் எஸ்.ஜி சூர்யா தினமும் காலை மதுரை சைபர் கிரைம் போலீசார் முன்னிலையில் கையெழுத்து நிபந்தனை தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai court refuses to remove SJ Surya bail conditions


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->