தேர்தல் வியூகங்கள் தொடக்கம்! QR அனுமதிச் சீட்டு…த.வெ.க. தேர்தல் பணிகள் குறித்து தீவிர ஆலோசனை...! - புஸ்ஸி ஆனந்த்
Election strategies begin QR entry passes Intensive discussion tvk election preparations Bussy Anand
தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கழகத்தின் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளுக்கான முக்கிய ஆலோசனைக் கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஜனவரி 25ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு, மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் நட்சத்திர விடுதியில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நேரில் கலந்துகொள்ளும் மாநில, மாவட்ட அளவிலான செயல்வீரர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய தேர்தல் பணிகள், வியூகங்கள், களப்பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.
மேலும், இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் QR குறியீடு கொண்ட அனுமதிச் சீட்டு பெற்ற மாநில மற்றும் மாவட்ட அளவிலான செயல்வீரர்கள் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கழகத்தின் தேர்தல் இயந்திரம் வேகமெடுக்கத் தொடங்கியிருப்பதை இந்த அறிவிப்பு சுட்டிக்காட்டுகிறது.
English Summary
Election strategies begin QR entry passes Intensive discussion tvk election preparations Bussy Anand