கூட்டணிக்குள் தனி பாதை...! - தனிச்சின்னத்தில் போட்டியிடும் த.மா.கா...! - ஜி.கே. வாசன் அறிவிப்பு - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளரும், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சருமான பியூஷ் கோயல் முன்னிலையில், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். இதன்மூலம் தமிழக அரசியலில் புதிய கூட்டணி கணக்குகள் தீவிரமடைந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு காலை விருந்து வழங்கி, அரசியல் ஆலோசனைகளில் ஈடுபட்டார்.

இந்த சந்திப்பு, எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு முக்கியத்துவம் பெற்றதாக அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.

பின்னர் சென்னை நுங்கம்பாக்கத்தில், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் உள்ளிட்டோர்களுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,“மிகப் பெரிய பெரும்பான்மையுடன் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும். சமூக நல்லிணக்கத்தை சிதைக்கும் வகையில் பேசும் உதயநிதி ஸ்டாலின் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்” என தீவிரமாகக் கூறினார்.

அதே சமயம், த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழ் மாநில காங்கிரஸ் வரும் தேர்தலில் தனிச்சின்னத்தில் களம் காணும்” என்று அறிவித்து, கூட்டணி அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

separate path within alliance TMC contest own symbol GK Vasan announcement


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->