மனஅழுத்தமே காவல்துறையினரின் வன்முறை செயலுக்கு காரணம்... மதுரை நீதிபதிகள் வேதனை.! - Seithipunal
Seithipunal


மதுரையை சார்ந்த நபர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில், சிறையில் உள்ள காவல் அதிகாரிகள் மற்றும் சிறை வாசிகளுக்கு மனநல சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். 

இது குறித்த மனுவை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நிலையில், இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. இதன் போது நீதிபதிகள் தெரிவிக்கையில், " இந்தியாவை பொறுத்த வரையில், சாதாரணமான மருத்துவர்களை விட மனநல மருத்துவர்களை அதிகம் தேவைப்படுகின்றனர். 

கொரோனா பரவலுக்கு பின்னர் பெரும்பாலானோர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். காவல்துறையினர் வன்முறை மனோபாவத்துடன் நடந்துகொள்வது, மனநலப் பிரச்சனைகளின் வெளிப்பாடாகவே இருக்கிறது. 

தமிழக சிறைகளில் இருப்போரின் தேவைக்காக மனநல சிகிச்சை மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையினர் குடும்பத்தினருடன் நேரம் செலவிட போதுமான அளவு கூட வாய்ப்பு கிடைப்பதில்லை " என்று தெரிவித்த நீதிபதிகள், தமிழக அரசு இது குறித்து பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai Court Feeling sad about Police Mental Stress


கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்குAdvertisement

கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்கு
Seithipunal