#Breaking: யானைகள் இறப்பு விவகாரம் - மதுரை கிளை அதிரடி உத்தரவு..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் யானைகள் இறப்பு தொடர்பாக உள்ள அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ விசாரணை செய்ய வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடியில் தனியார் ரிசார்ட் நடத்தி வந்த கொடூரர்களின் செயல்பாட்டினால், காட்டு யானை பரிதாபமாக வலியால் துடித்து உடல்நலக்குறைவு ஏற்பட்டு பலியானது. மேலும், யானையை தீ வைத்து கொளுத்தும் பதைபதைப்பு வீடியோ காட்சிகளும் வெளியானது. 

இந்நிலையில், மதுரை உயர்நீதிமன்ற கிளையில், " யானைகள் பிரதானமானாக பயன்படுத்தி வந்த பாதைகள் அளிக்கப்பட்டு, செங்கல் சூலை மற்றும் தனியார் ரெசார்ட்டுகள் என்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், யானைகள் உணவு தேடி வரும் வழியில் மனிதர்களால் அவை துன்புறுத்தப்படுகிறது. மனிதர்கள் வாழ வேண்டும் என்றால் விலங்குகளும் வாழ வேண்டும். 

மனிதர்களை கண்டு அஞ்சி சில நேரம் தங்களை பாதுகாத்து கொள்ளவே விலங்குகள் தங்களின் பலத்த உபயோகம் செய்து, அதன் எதிரியான மனிதனை கொள்ளும் சூழ்நிலை ஏற்படுகிறது. இவ்வாறான ஆக்கிரம்புகளான செங்கல் சூலை, தனியார் ரெசார்ட்டுகள் போன்றவற்றை அகற்ற வேண்டும் " என்று மனுதாக்கல் செய்யப்பட்டது. 

இது குறித்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், " தமிழகத்தில் யானைகள் இறப்பு தொடர்பாக உள்ள அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ விசாரணை செய்ய வேண்டும். யானைகள் இறப்பு விவகாரத்தில் தமிழகத்தை தாண்டிய விசாரணை அவசியமாகிறது. யானைகள் மிகவும் முக்கியமான உயிரினம். சுற்றுசூழலை பாதுகாக்க யானைகள் அவசியமாகிறது. யானைகள் இறப்பு விவகாரத்தில் கீழ்நிலையில் உள்ளவர்கள் மட்டுமே தண்டனைக்கு உள்ளாகின்றனர் " என்று மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai Court Approve CBI Investigation about Elephant Mystery Deaths Tamilnadu


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->