தமிழகத்தில் இனி ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.. அதிரடியாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்யாத வண்ணம் போக்குவரத்து மற்றும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார்.

உணவுப்‌ பொருள்‌ வழங்கல்‌ மற்றும்‌ நுகர்வோர்‌ பாதுகாப்புத்‌ துறை சார்பாக தன்னார்வ நுகர்வோர்‌ அமைப்புகளுடன்‌ காலாண்டு கூட்டம்‌ மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தலைமையில்‌ 21-12-2021 அன்று மாலை நடைபெற்றது.

மதுரை மாநகரில்‌ தற்போது பெர்மிட்‌ பெற்று இயக்கும்‌ ஷேர்‌ ஆட்டோக்களில்‌ நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான நபர்களை ஏற்றி செல்வது பயணிகள்‌ அமரும்‌ உள்கட்டமைப்புகளை விதிகளுக்கு மாறாக மாற்றி வாகனங்களை இயக்கும்‌ பட்சத்தில்‌ அவ்வகை ஆட்டோக்களை பறிமுதல்‌ செய்வதுடன்‌ பெரிமிட்‌ ரத்து செய்ய சம்பந்தப்பட்ட வட்டாரப்‌ போக்குவரத்து அலுவலர்களிடம்‌ தெரிவிக்கப்பட்ட து.

அரசு பேருந்துகளில்‌ படிக்கட்டில்‌ பயணம்‌ செய்யும்‌ பள்ளி / கல்லூரி மாணவர்களை சிறப்பு குழு அமைத்து அவர்களை கண்காணித்து, அம்மாதிரி விதி மீறும்‌ மாணவர்களை சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்‌, கல்லூரி முதல்வரின்‌ கவனத்திற்கு கொண்டு சென்று தக்க அறிவுரைகள்‌ வழங்கி அவ்வாறான செயலில்‌ எதிர்காலங்களில்‌ ஈடுபடாவண்ணம்‌ நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழகம்‌ மற்றும்‌ காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது.

மதுரை மாநகராட்சி தமிழ்நாடு மின்சார வாரியம்‌, அரசு போக்குவரத்து கழகம்‌, உணவு பாதுகாப்புத்‌ துறை மற்றும்‌ சுகாதாரத்‌ துறைக்கு தொடர்பான நுகர்வோர்‌ அமைப்பினர்‌ தெரிவித்த புகார்களின்‌ மீது உடன்‌ நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌, மாவட்ட வழங்கல்‌ அலுவலர்‌ மற்றும்‌ பிறதுறை அலுவலர்கள்‌ கலந்துகொண்டனர்‌.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madurai collector new order for police


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->