திருப்பரங்குன்றம் தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை மீண்டும் உத்தரவு..!
Madurai branch of the High Court has again ordered lighting of the lamp in Thiruparankundram
இன்று இரவு 7 மணிக்குள் திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை போலீஸ் கமிஷனர் பாதுகாப்பு வழங்குமாறு உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு செயல்படுத்த நேற்று மறுத்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அதை இன்று விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். குறிப்பாக, உள்ளூர் முஸ்லிம்களே ஆட்சேபம் தெரிவிக்காத நிலையில், தமிழக அரசு இந்த விஷயத்தில் பிடிவாதம் பிடிப்பது இந்துக்கள் மட்டுமின்றி அனைத்து மக்கள் மத்தியிலும் அதிருப்தியை உருவாக்கி இருக்கிறது.

திமுக அரசுக்கு முஸ்லீம் சிறுபான்மை ஓட்டுகள் கையை விட்டு போய்விடுமோ என்ற பயத்தில் எடுத்துள்ள தவறான அணுகுமுறையால், இதுவரை பாரதிய ஜனதாவை ஆதரிக்காமல் தவிர்த்த இந்துக்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், அதனால் கட்சிக்கு பெரும் பாதிப்பு உண்டாகும் என திமுக சீனியர் நிர்வாகிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அதாவது, யாருடைய தவறான ஆலோசனையை கேட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் இப்படி செய்கிறார் என்று எங்களுக்கு தெரியவில்லை என்றும், பாரதிய ஜனதா மீதான கோபத்தால், ஒட்டு மொத்த இந்துக்கள் ஆதரவையும் இழந்து விடக்கூடாது என்பதை யார் எடுத்துச் அவருக்கு சொல்வது என்று புரியவில்லை” என ஒரு தலைவர் ஆதங்கப்பட்ட்டுள்ளார். அத்துடன் நீதிமன்றத்தின் இன்றைய உத்தரவை நிறைவேற்றுவதன் மூலம், பெரும் இழப்பை ஸ்டாலின் தவிர்க்கலாம் என மூத்த அதிகாரிகள் கருது தெரிவித்துள்ளனர்.
English Summary
Madurai branch of the High Court has again ordered lighting of the lamp in Thiruparankundram