மதுரை பாரதி மருத்துவமனையின் கொடூரம்.. அதிக பணம் வசூல், பாண்டு பத்திரத்தில் கையெழுத்து வாங்கி உடல் ஒப்படைப்பு.! - Seithipunal
Seithipunal


ரூ.2 இலட்சம் முன்பணம் பெற்றுக்கொண்டு கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளி உயிரிழந்த நிலையில், மீதி பணத்திற்கு 100 ரூபாய் பத்திரத்தில் எழுதி வாங்கிக் கொண்டு உடலை ஒப்படைத்த கொடூரம் அரங்கேறியுள்ளது. 

மதுரை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வரும் நிலையில், கடந்த திங்கட்கிழமை ஒரே நாளில் 400 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், நாளொன்றுக்கு சராசரியாக 15 பேர் உயிரிழந்து வரும் நிலையில், தற்போது வரை 4444 பேர் மதுரை அரசு ராஜாஜி, அரசு மருத்துவமனை, தோப்பூர் அரசு மருத்துவமனை, மதுரை காமராஜர் பல்கலைக்கழக விடுதி ஆகிய இடங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதனைப்போல, 40 க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக அம்மாவட்டத்தில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள புதூர் பகுதியில் இருக்கும் பாரதி கருத்தரித்தல் மையம் மருத்துவமனையில், நாகேந்திரன் அவரது மனைவி சத்யா, மகள் காவியா ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

இவர்களில் நாகேந்திரன் மற்றும் மனைவி, மகள் பூரண குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், நாகேந்திரனுக்கு தொற்று பாதிப்பு மீண்டும் உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். மேலும், சிகிச்சை அளிக்க பேக்கேஜ் சிஸ்டம் என்ற பெயரில் மருத்துவமனை நிர்வாகம் நோயாளிகளின் உறவினர்களிடம் பேசி முன்பணமாக ரூபாய் 2 இலட்சமும் பெற்று சிகிச்சை அளித்து வந்துள்ளது. 

இந்நிலையில், திங்கட்கிழமை இரவு நாகேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழக்கவே, மருத்துவமனை நிர்வாகம் இறந்தவரின் உடலைத் தர வேண்டும் என்றால் மீதி பணம் ரூ. ஒன்றரை இலட்சம் செலுத்தினால் மட்டுமே தருவோம் என்று தெரிவித்துள்ளனர். தங்களிடம் தற்போது பணம் இல்லை என்று நாகேந்திரனின் உறவினர்கள் கூற, மீதி பணத்திற்கு மாதத்தவணை கட்டுவதற்குக் ரூபாய் 200 பத்திரத்தில் எழுதி கொடுங்கள் உடலை தருகிறோம் என்றும் பத்திரத்தில் மருத்துவமனை நிர்வாகம் எழுதி வாங்கியுள்ளனர். 

மேலும், தாய், மகள் இருவருக்கும் 5 லட்சம் ரூபாய்க்கும் மேலாக கட்டணமும் வசூலித்த நிலையில், மருத்துவமனை ஆம்புலன்ஸில் உடலை கொண்டு செல்ல வேண்டும் என்றும் கூறி அதன் மூலமாக ரூ. 10 ஆயிரமும் வசூல் பார்த்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா வைரசுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகள் அதிகபட்சமாக ரூபாய் இரண்டரை இலட்சம் மட்டுமே கட்டணமாக வசூல் செய்ய வேண்டும் என்று அரசு கட்டணம் நிர்ணயம் செய்துள்ள நிலையில், கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனைகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai Bharathi Hospital Administration Atrocity Corona patient Died Loan Amount


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->