தேர்தலுக்கு முன்பே... "தபால் வாக்குகளை மீண்டும் எண்ணுங்க".. நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!!
Madrashc verdict Krishnagiri constituency postal vote count again
கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அசோக்குமார் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் செங்குட்டுவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த சட்டமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் நிராகரிக்கப்பட்ட 605 தபால் வாக்குகளை சரிபார்த்து மறு எண்ணிக்கை செய்ய வேண்டும்.

நிராகரிக்கப்பட்ட தபால் வாக்குகளை 20 நாட்களில் சரிபார்த்து எண்ணி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், மறு எண்ணிக்கைக்கு தேவையான உதவிகளை வழங்க தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற பொது தேர்தல் பணிகள் மும்மரமாக நடந்து வரும் இத்தகைய சூழலில் கடந்த சட்டமன்ற பொது தேர்தலில் தொடரப்பட்ட வழக்கில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Madrashc verdict Krishnagiri constituency postal vote count again