ஆடல் பாடலுக்கு அனுமதி மறுப்பதா? அதை ஏற்க முடியாது.!! - நீதிமன்றம் அதிரடி.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் சித்திரை மாதம் தொடங்கி அடுத்த நான்கு மாதங்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் திருவிழாக்கள் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த திருவிழாக்களில் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடத்த உள்ளூர் காவல்துறை அனுமதி யோடு நடத்தப்படுகிறது. 

ஆடலும் பாடலும் நிகழ்ச்சி என்ற பெயரில் ஆபாச நடனங்கள் நடத்தப்படுவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதை அடுத்து கடும் கட்டுப்பாடுகள் விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி கோவில் திருவிழாக்களில் ஆடலும் பாடலும் நிகழ்ச்சிக்கு காவல்துறையினர் அனுமதி மறுப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர், பழைய மரக்காணம் கிராமத்தில் மாரியம்மன் கோயிலில் கூழ்வார்த்தல் விழா மே 18-ம் தேதி நடைபெறுகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டது என்று இந்த வழக்கு விசாரணையில் நீதிபதி தெரிவித்தார்.

மேலும் தேர்தல் நடத்தை வீதிகளை காரணம் காட்டி கோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் மனுதாரர் அளித்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madrashc is not accept deny permission dance program


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->