தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கு! தமிழக அரசுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தில் தமிழக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக அப்போதைய அதிமுக அரசு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையத்தை விசாரணைக்காக அமைத்தது. 

அதனை தொடர்ந்து ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பிறகு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் தனது அறிக்கையை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது.

அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை செய்ததன் அடிப்படையில் அந்த துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. மேலும் 17 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை செய்த நிலையில் அரசு எந்த நடவடிக்கையும் இருக்காமல் தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழக்கை முடித்து வைத்தது.

இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணையம் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? என கேள்வி எழுப்பியதோடு இது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை 17ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MadrasHC ask TNgovt regards Thoothukudi firing report


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->