அரசின் புதிய திட்டங்கள்: அரசியல் தலைவர்களின் பெயரையோ, முன்னாள் முதல்வரின் போட்டோவையோ பயன்படுத்தக் கூடாது: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!
Madras High Court rules that names of political leaders and photos of former Chief Ministers should not be used in new government schemes
இனிவரும் காலங்களில் அரசின் திட்டங்களுக்கு உயிருடன் இருக்கும் தலைவர்களின் பெயர்கள் மற்றும் படங்களைப் பயன்படுத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கு விசாரணையில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்த விளம்பரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி போட்டோ பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். என்றும், முதல்வர் பெயரை பயன்படுத்தவும் தடை விதிக்க வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தரப்பு மனு குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கை தலைமை நீதிபதிகள் எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் விசாரித்தனர். அதில் உச்ச நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில், அரசு விளம்பரங்களில் முதல்வர் போட்டோ பயன்படுத்தி கொள்ளலாம் என்றும், ஆனால் கட்சியின் கொள்கைத் தலைவர்களின் போட்டோ அல்லது முன்னாள் முதல்வர் போட்டோக்களை பயன்படுத்துவது சுஉச்ச நீதிமன்றம் தீர்ப்பிற்கு முரணானது என நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

மேலும், அரசு திட்டத்தின் பெயரில், உயிருடன் இருக்கும் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்றும், அத்துடன், ஆளும் கட்சியின் பெயர், சின்னத்தை பயன்படுத்துவதற்கு உச்ச நீதிமன்றம்மற்றும் தேர்தல் கமிஷன் உத்தரவுக்கு விரோதமானது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
இனி வரும் காலங்களில் தமிழக அரசு புதிதாக தொடங்க உள்ள மற்றும் அமலில் உள்ள திட்டங்கள் குறித்த விளம்பரங்களில் அரசியல் தலைவர்களின் பெயரையோ, முன்னாள் முதல்வரின் போட்டோவையோ பயன்படுத்தக் கூடாது என்று பாப்பரப்பு உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், அரசு நலத்திட்டம் தொடங்குவது மற்றும் செயல்படுத்துவதற்கு எதிராக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் தலைமை நீதிபதி அமர்வு தெளிவுபடுத்தியுள்ளது.
அத்துடன், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதல்வர் பெயரை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அதிமுக அளித்த புகாரை தேர்தல் தேர்தல் கமிஷன் விசாரிக்க இந்த வழக்கு தடையாக இருக்காது என தெளிவுபடுத்திய நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 13-ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.
English Summary
Madras High Court rules that names of political leaders and photos of former Chief Ministers should not be used in new government schemes