ஊராட்சி மன்ற தலைவர் கொலை! திமுக பிரமுகருக்கு ஆயுள் தண்டனை!
MAADAKUDI SEKAR MURDER CASE
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கில் ஆறு பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
திருச்சி மாவட்டம், சமயபுரம் அடுத்த மாடக்குடி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் வழக்கறிஞர் சேகர்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரான இவர், கடந்த 2015 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் சமயபுரம் நால்ரோட்டில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக சமயபுரம் போலீசார் நடத்திய விசாரணையில், அதேபகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் சேகர் சம்பந்தப்பட்டு இருந்ததாகவும், இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக சேகர் பழிக்கு பழி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரியவந்தது.
தொடர்ந்து இந்த கொலை வழக்கில் திமுக பிரமுகர் உள்ளிட்ட 6 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து திமுக பிரமுகர் ஜான்சன் குமார், இளையராஜா, நடராஜன், கனகராஜ், ஹரிகிருஷ்ணன், செந்தில் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், சேகர் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட 6 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
English Summary
MAADAKUDI SEKAR MURDER CASE