ஒப்பந்த செவிலியர்களுக்கு சொந்த மாவட்டத்தில் பணி நியமனம்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டனர். அவர்களின் ஒப்பந்தம் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி உடன் முடிவடைந்த நிலையில் பணி நீட்டிப்பு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் தமிழக முழுவதும் உள்ள ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று தமிழகத்தில் பணி நிரந்தரம் கோரி சென்னை எழும்பூரில் இருந்து கோட்டையை நோக்கி கொரோனா கவச உடை அணிந்து பேரணியாக செல்ல முயன்ற ஒப்பந்த செவிலியர்கள் 2000 பேர் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் சென்னை ஓமதூரார் அரசு மருத்துவமனையில் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது "கொரோனா காலகட்டத்தில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்கள் மாவட்ட சுகாதார அமைப்பின் மூலம் வழங்கப்படும் பணியை ஏற்க வேண்டும். ஒப்பந்த செவிலியர்கள் அவர்களது சொந்த மாவட்டத்தில் பணி நியமனம் செய்ய வாய்ப்பு இருக்கிறது. இந்த வாய்ப்பினை ஒப்பந்த செவிலியர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என அறிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ma Subramanian announced contract nurses work in their own district


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->