பிஞ்சுயிரைப் பறித்த கள்ளக்காதல்...! 1.5 வயது குழந்தைக்குப் பாலில் விஷம் வைத்துக் கொன்ற கல்நெஞ்சக்காரத் தாய்...! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே நடைபெற்ற ஒன்றரை வயது குழந்தையின் மரணம் தொடர்பான விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.தலைவாசல் அருகேயுள்ள வரகூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி திருமலைவாசனின் மனைவி லலிதா (23).

இவர்களுக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகின்றன. ஹர்சன்ராஜ் (5) மற்றும் புவன்ராஜ் (ஒன்றரை வயது) என இரண்டு மகன்கள் உள்ளனர்.கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக சுமார் பத்து மாதங்களுக்கு முன்பு லலிதா தனியாகப் பிரிந்து, இளைய மகன் புவன்ராஜுடன் சிறுவாச்சூரில் உள்ள தாயார் வீட்டில் வசித்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

மூத்த மகன் ஹர்சன்ராஜ் தந்தையுடன் இருந்துள்ளார்.கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி புவன்ராஜுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாகக் கூறி, லலிதா குழந்தையை ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதற்கிடையில் குழந்தையின் மரணத்தில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலை இருப்பதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, தலைவாசல் காவலர்கள் வழக்குப் பதிவு செய்து உடலை உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பினர்.இதற்கிடையில், பத்து நாட்களுக்கு முன்பு லலிதா திடீரென தலைமறைவானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதே சமயம் உடற்கூறு ஆய்வு அறிக்கையில், குழந்தையின் உடலில் விஷத்தன்மை கொண்ட பொருள் கலந்திருந்தது உறுதி செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதையடுத்து லலிதாவைத் தேடி காவலர்கள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர். விசாரணையின் போது, அவர் தனது கள்ள உறவுடன் தலைமறைவாகியிருந்தது தெரியவந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து லலிதாவை காவலர்கள் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில், சிறுவாச்சூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவருடன் ஏற்பட்ட பழக்கம் பின்னர் கள்ள உறவாக மாறியதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும், அந்த உறவுக்கு தனது ஒன்றரை வயது மகன் இடையூறாக இருப்பதாக கருதியதால், சம்பவத்தன்று குழந்தைக்கு பூச்சிக்கொல்லி மருந்தை கலந்த உணவை கொடுத்து உயிரிழக்கச் செய்ததாக அவர் ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குழந்தை எவ்வாறு உயிரிழந்தது என்று அக்கம்பக்கத்தினர் சந்தேகிப்பார்கள் என்பதால், வலிப்பு ஏற்பட்டதாக நாடகமாடி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும், பின்னர் தனது கள்ள உறவாளருடன் தலைமறைவானதாகவும் அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.இந்த சம்பவம் தொடர்பாக காவலர்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

love that took away life child cruel mother who killed her 1.5-year-old child by poisoning her milk


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




சினிமா

Seithipunal
--> -->