ஜாதி வெறிக்கு பலியான காதல்...! மாற்று சமூக வாலிபரை காதலித்ததால் இளம்பெண் ஆணவக்கொலை... பதறவைக்கும் பின்னணி என்ன...?
Love that fell victim casteism young woman murdered falling love young man from different community What shocking background
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகேயுள்ள தெற்கு மயிலோடை கிராமத்தை சேர்ந்த செல்வத்தின் மகள் அபிசெல்வி (19), சமூக வலைதளம் மூலம் அறிமுகமான சேலம் மாவட்ட இளைஞருடன் கடந்த சில ஆண்டுகளாக நெருங்கிய தொடர்பில் இருந்து வந்ததாக தெரியவந்துள்ளது.இந்த நட்புறவு பின்னர் காதலாக மாறிய நிலையில், அதற்கு குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

குறிப்பாக அபிசெல்வியின் தாயார் மற்றும் சகோதரர் சிவஞானம் பலமுறை அவரை கண்டித்ததாக தெரிகிறது.இந்த சூழலில், வீட்டில் இளம்பெண் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தகவலறிந்த கயத்தாறு காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையை தொடங்கினர்.
விசாரணை முன்னேறியபோது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அபிசெல்வி காதலித்து வந்த இளைஞர் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதும், இதன் காரணமாக குடும்பத்தில் தொடர்ந்து கருத்து மோதல் நிலவி வந்ததும் தெரியவந்தது.இதையடுத்து பல்வேறு கோணங்களில் நடத்தப்பட்ட விசாரணையில், இளம்பெண்ணின் உயிரிழப்பில் சந்தேகத்திற்கிடமான அம்சங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அபிசெல்வியின் மரணம் தற்கொலை அல்ல என்றும், ஆணவக்கொலை நடந்திருக்கலாம் என்றும் சந்தேகம் வலுத்தது.இதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சகோதரர் சிவஞானம் சம்பவத்தில் தொடர்புடையவர் என தெரியவந்ததைத் தொடர்ந்து அவரை காவலர்கள் கைது செய்தனர்.
மேலும் வழக்கில் உடந்தையாக இருந்ததாக கூறப்படும் அவரது தாய் எஸ்தர் பாலினையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.காதலுக்கு எதிர்ப்பு காரணமாக இளம்பெண் உயிரிழந்த இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், சமூக வலைதளங்களிலும் பரவலாக விவாதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Love that fell victim casteism young woman murdered falling love young man from different community What shocking background