இமயத்தின் மறைவால் கலங்கிய ரஜினி...! 'அவர் போல் யாருமில்லை'...! - பாரதிராஜா மறைவு குறித்து வருத்தம் தெரிவித்த சூப்பர் ஸ்டார்...! - Seithipunal
Seithipunal


தமிழ்த் திரையுலகின் கிராமத்து காவியங்களை வெள்ளித்திரையில் உயிர்ப்பித்த இயக்குநர் இமயம் பாரதிராஜா, உடல்நலக்குறைவு காரணமாக தனது 84-வது வயதில் இன்று காலமானார். அவரது மறைவு செய்தி திரையுலகினரையும் ரசிகர்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாக உடல்நலப் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த பாரதிராஜா, சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சைப் பலனளிக்காத நிலையில் இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் அவரது மகன் மனோஜ் திடீரென உயிரிழந்த சம்பவம் பாரதிராஜாவை பெரிதும் பாதித்ததாக கூறப்படுகிறது. அந்த துயரத்திலிருந்து முழுமையாக மீள முடியாத நிலையில் அவரது உடல்நலமும் தொடர்ந்து பாதிக்கப்பட்டிருந்தது.1977-ஆம் ஆண்டு வெளியான ‘16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, தமிழ் சினிமாவின் கதையாடல் முறையையே மாற்றியமைத்தவர்.

கிராமத்து வாழ்க்கை, மனித உறவுகள் மற்றும் மண்ணின் உணர்வுகளை இயல்பாக திரையில் வடிவமைத்து, தனக்கென அழியாத இடத்தை தமிழ் திரையுலகில் உருவாக்கினார்.இந்த நிலையில், பாரதிராஜாவின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது மனவேதனையை வெளிப்படுத்தினார்.

அப்போது ரஜினிகாந்த் தெரிவித்ததாவது,“தமிழ் திரையுலகில் எண்ணற்ற நடிகர், நடிகைகளுக்கு வாய்ப்புகளை வழங்கி அவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றிய பெரும் கலைஞர் பாரதிராஜா. திரைப்படத் துறையில் யாருக்கு எந்த சிக்கல் ஏற்பட்டாலும் முதன்முதலில் குரல் கொடுத்து ஆதரவாக நின்றவர் அவர்தான்.

அவர் குழந்தை மனம் கொண்ட மனிதர். மனதில் தோன்றியதை எந்த மறைப்பும் இல்லாமல் வெளிப்படையாகச் சொல்லக்கூடியவர். என் மீது அவருக்கு அளவற்ற பாசம் இருந்தது. ஆனால் என் நடிப்பில் ஏதேனும் குறை இருந்தால் அதையும் நேருக்கு நேர் தயக்கமின்றி சொல்லிவிடுவார்.

அவரது மறைவு திடீரென நிகழ்ந்த ஒன்றல்ல. இருந்தபோதிலும், அவர் உயிருடன் இருக்கும்போதே நேரில் சந்தித்து பேச வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. பலமுறை அவரைப் பார்க்க விருப்பம் தெரிவித்தேன். ஆனால் உடல்நிலை மேம்பட்ட பிறகு வரலாம் என்று கூறிக்கொண்டே இருந்தார்கள்.

இறுதியில், அவர் உயிருடன் இருக்கும் போது கடைசியாக சந்திக்கும் வாய்ப்பை இழந்துவிட்டேன். அந்த வருத்தம் என் மனதை மிகவும் வாட்டுகிறது” என்று கண்கலங்கியபடி தெரிவித்தார்.ரஜினிகாந்தின் இந்த உருக்கமான வார்த்தைகள் அங்கிருந்த திரையுலகினரையும் ரசிகர்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தின.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rajinikanth shocked by demise Himayat There no one like him Superstar expresses grief over Bharathiraja demise


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->