திருமணம் முடித்த கையோடு மனைவியை அவரின் வீட்டிற்கு அனுப்பிய காதல் கணவன்.! - Seithipunal
Seithipunal


ஓமலூரில் காதல் மனைவியை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது. 

சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் கருங்கல்வாடி பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் துரை. அன்னதானபட்டியைச் சேர்ந்தவர் ஷீலா. இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட பழக்கமானது, பின்னாளில் காதலாக மாறி இருவரும் காதலித்து வந்துள்ளனர். 

இந்நிலையில், தற்போது காதல் ஜோடிகள் இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் முடித்த நிலையில், காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து புகார் மனுவை ஏற்ற காவல்துறையினர், இருதரப்பு பெற்றோர்களையும் அழைத்து பேசியுள்ளனர். 

இதன்போது, முறைப்படி வந்து பெண் கேட்டால் திருமணம் செய்து வைப்பதாக பெண் வீட்டார் சார்பில் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து, பெண் வீட்டாரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட காதல் கணவன், மனைவியை திருமணம் முடித்த கையோடு அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Love Married Woman Return home As per Parents Promise


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal