ஒருதலை காதல் தோல்வி.. கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை.!
Love failure college student hanged suicide
காதல் தோல்வியால் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியை சேர்ந்த சீமாஸ்ரூபன் என்பவர் சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மெக்கானிக்கல் பொறியியல் படித்து வந்தார். இந்த நிலையில் இவர் ஒருதலையாக பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
இதில், அந்த பெண்ணிடம் காதலை தெரிவிக்க அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கடந்த ஒரு வாரமாக மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில் மாணவர் திடீரென தனது விடுதி அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து அவரை மீட்ட சக மாணவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Love failure college student hanged suicide