எதிர்க்கட்சியினர் தோல்வி பயத்தில் முறைகேடுகளில் ஈடுபட முயற்சி செய்யலாம்; 75 ஆயிரம் பேர் பங்கேற்ற திமுக பாக முகவர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் எச்சரிக்கை..! - Seithipunal
Seithipunal


திமுக பாக முகவர்கள் 75 ஆயிரம் பேருடன் ஒரே நேரத்தில் கால் பிரிட்ஜிங் முறையில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாடினார். அப்போது எதிர்க்கட்சியினர் தோல்வி பயத்தில் முறைகேடுகளில் ஈடுபட முயற்சி செய்யலாம் என்றும் எந்த வித விதி மீறலோ, முறைகேடோ நடந்தால் உடனடியாக வார் ரூம் எண்ணிற்கு தொடர்புகொண்டு புகார் அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தேர்தல் நாளில் கடைசி வாக்கு பதிவாகும் வரை வாக்குச்சாவடிகளில் திமுக முகவர்கள் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். மேலும், திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைத்திட இடைப்பட்ட நாட்களில் முழு மூச்சுடன் பாக முகவர்கள் ஓய்வின்றி உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது;

கருப்புச் சட்டமான Delimitation Bill-ல் நாம் வென்றது டிரெய்லர்தான், இன்னும் பல போர்கள் நம் முன்பு இருக்கின்றன என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தமிழ்நாட்டைத் தகர்க்க வரும் டெல்லி அணியைத் தடுத்து நிறுத்த நமது கூட்டணியால் தான் முடியும் என தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஒவ்வொரு வாக்குச்சாவடி முகவரும் தங்கள் வாக்குச்சாவடிக்கு உட்பட்ட வீடுகளுக்கு மீண்டும் ஒருமுறை நேரில் சென்று ஆதரவு கேட்க வேண்டும் என்றும், வாக்குப் பதிவு நாளில் திமுக கூட்டணிக்கு ஆதரவான வாக்குகள் ஒன்று கூட விடுபட்டு விடக் கூடாது என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், எதிர்க்கட்சியினர் தோல்வி பயத்தில் முறைகேடுகளில் ஈடுபட முயற்சி செய்யலாம் என்றும் எந்த வித விதி மீறலோ, முறைகேடோ நடந்தால் உடனடியாக வார் ரூம் எண்ணிற்கு தொடர்புகொண்டு புகார் அளிக்க வேண்டும் என்றும் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Stalin Issues Warning at DMK Booth Agents Meeting Attended by 75000 People


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?


செய்திகள்



Seithipunal
--> -->