திலக் வர்மாவின் அதிரடி; அஷ்வினி குமாரின் அபார பந்துவீச்சு; குஜராத்தை 99 ரன்களில் வீழ்த்திய மும்பை அணி..! - Seithipunal
Seithipunal


19வது ஐபிஎல் போட்டியின் 30வது போட்டி இன்று அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இன்றைய ஆட்டத்தில் மும்பை - குஜராத் அணிகள் மோதின. 

ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத்தை அணி முதலில் பௌலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய மும்பை அணி, முதலில் தடுமாறியது. இடைவேளைக்கு பிறகு ருத்ரதாண்டவம் ஆடியது.

குறிப்பாக திலக் வர்மா 45 பந்துகளில் 101 ரன்கள் எடுத்தார். இது ஐபிஎல் போட்டியின் அவரது முதலாவது சதமாகும். அடுத்தபடியாக அதிகபட்சமாக நமன் தீர் 45 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் பெரிதாக ரன் எடுக்கவில்லை.  குஜராத் அணி சார்பில், றபாடா 03 விக்கெட்டினையும், பிரதீஸ் கிருஷ்ணா மற்றும் சிராஜ் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.

இறுதியில் 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்களை எடுத்தது. தொடர்ந்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்க உள்ளது.

ஆனால், மும்பை அணியினரின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்காமல் பவர் பிளேயிலேயே 03 விக்கெட்டினை இழந்தது. தொடக்க ஆட்டக்காரன் சாய் சுதர்சன் பும்ராவின் முதல் பந்துலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். அடுத்து பட்லர் 05 ரன்களிலும்,  கேப்டன் கில் 14 ரங்களிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து வாஷிங்டன் சுந்தர் அதிகபட்சமாக 26 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். மும்பை அணி சார்பாக பும்ரா, ஹர்டிக் பாண்டியா தலா ஒரு விக்கெட்டினையும், அஸ்வினி குமார் சிறப்பாக பந்து வீசி 04 விக்கெட்டினையும், கசன்பர் மற்றும் சான்டனர் தலா 02 விக்கெட்டினை வீழ்த்தினர். இறுதியில் குஜராத்தை அணி, 15.5 ஓவரில் சகல விக்கெட்டினையும் இழந்து 100 ரன்களை மாத்திரம் பெற்றது. இதன் மூலம் மும்பை அணி, 99 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 07 இடத்திற்கு முன்னேறியுள்ளது. போட்டியின் ஆட்டநாயகனாக திலக் வர்மா தேர்வு செய்யப்பட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mumbai defeats Gujarat for 99 runs


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?


செய்திகள்



Seithipunal
--> -->