தைவானில் மலர்ந்த காதல்... தமிழகத்தில் அதிரடி திருப்பம்! விமானம் பிடித்து வந்து காதலனை சிக்கவைத்த பெண்...!
Love blossomed Taiwan dramatic twist Tamil Nadu woman caught plane and trapped her boyfriend
‘காதல்’ என்ற உணர்வுக்கு எல்லைகள் கிடையாது. நாடு, மொழி, இனம், கலாசாரம் என எந்த வேறுபாடுகளையும் கடந்து உருவாகும் காதல், சில நேரங்களில் திருமணத்தில் இணைந்து மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது. ஆனால், அதே காதல் நம்பிக்கையை இழக்கச் செய்தால் வாழ்க்கையே எதிர்பாராத திருப்பத்தை சந்திக்க நேரிடுகிறது.
அப்படியொரு சம்பவம்தான் தைவானில் படிக்கச் சென்ற தமிழக இளைஞருக்கும், அந்நாட்டைச் சேர்ந்த பெண்ணுக்கும் இடையே நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. காதலித்து திருமணம் செய்வதாக உறுதியளித்துவிட்டு இந்தியா திரும்பிய இளைஞர், பின்னர் தொடர்பை துண்டித்ததாகக் கூறி தைவான் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த போடிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். 32 வயதான இவர், எம்.எஸ்சி. பட்டம் முடித்துள்ளார். தத்துவவியல் துறையில் முனைவர் பட்டம் பெறுவதற்காக கடந்த 2023-ம் ஆண்டு தைவான் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
தைவானில் தங்கி படித்து வந்த ஜெகதீஷுக்கு, அங்குள்ள தைச்சுங் நகரத்தைச் சேர்ந்த 35 வயதான ஜோயிங்யிங் என்ற பெண்ணுடன் இணையவழி அறிமுகம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த அறிமுகம் காதலாக மாறியதாக கூறப்படுகிறது.
இந்தியரை திருமணம் செய்துகொள்ள விரும்பிய ஜோயிங்யிங், ஜெகதீஷை திருமணம் செய்துகொள்வது தொடர்பாக அவருடன் பேசியதாக தெரிவிக்கப்படுகிறது. முனைவர் பட்டப் படிப்பை முடித்ததும் திருமணம் செய்து கொள்வதாக ஜெகதீஷ் உறுதியளித்ததை நம்பிய அந்தப் பெண், அவரது படிப்புக்கான செலவுகள், தங்குமிடம் மற்றும் அன்றாட தேவைகளுக்கும் உதவி செய்ததாக கூறப்படுகிறது.
ஜெகதீஷை தனது பெற்றோரிடமும் ஜோயிங்யிங் அறிமுகப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், அவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, இருவரும் தனியாக வீடு எடுத்து கணவன்-மனைவியாக வசித்து வந்ததாக அந்தப் பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு ஜெகதீஷ் தனது முனைவர் பட்டப் படிப்பை நிறைவு செய்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள பெற்றோரிடம் சென்று, மீண்டும் தைவான் திரும்பி திருமணம் செய்து கொள்வதாக ஜோயிங்யிங்கிடம் தெரிவித்துவிட்டு அவர் இந்தியா வந்ததாக கூறப்படுகிறது.
இந்தியாவுக்கு திரும்பிய தொடக்கத்தில் ஜோயிங்யிங்குடன் ஜெகதீஷ் செல்போன் மூலம் தொடர்ந்து பேசி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், சுமார் 5 மாதங்களுக்கு முன்பு அவருடனான தொடர்பை திடீரென துண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஜோயிங்யிங், ஜெகதீஷை தொடர்புகொள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவரிடமிருந்து உரிய பதில் கிடைக்காத நிலையில், இணையவழியாக உடுமலையைச் சேர்ந்த வழக்கறிஞர் சரஸ்வதியை தொடர்புகொண்டு சட்ட ஆலோசனை பெற்றுள்ளார்.
English Summary
Love blossomed Taiwan dramatic twist Tamil Nadu woman caught plane and trapped her boyfriend