'துள்ளுவதோ இளமை' நடிகர் அபினய் மறைவு: திரையுலகினர் இரங்கல்!
Liver Diseases thulluvatho ilamai actor Abhinay passes away
'துள்ளுவதோ இளமை' திரைப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து நடித்த நடிகர் அபினய் (44), நீண்ட நாட்களாகக் கல்லீரல் தொடர்பான கடுமையான உடல்நலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்குத் தமிழ்த் திரையுலகினர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
வேலைவாய்ப்பின்றி, தனிமையில் வாழ்ந்து வந்த அபினய், உடல்நல பாதிப்புடன் பொருளாதாரச் சிரமங்களையும் எதிர்கொண்டார். இதனால் சிகிச்சைக்கான செலவுகளைச் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
அபினயின் சிகிச்சைக்காக, திரையுலகைச் சேர்ந்த பலரும் உதவிக்கரம் நீட்டினர். நகைச்சுவை நடிகரும், நாயகனுமான பாலா, அபினயை நேரில் சந்தித்து நிதி உதவி வழங்கினார். நடிகர் தனுஷ் நிதி உதவியாக ரூ.5 லட்சம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
அபினய், 2002-ஆம் ஆண்டு கஸ்தூரி ராஜா இயக்கிய 'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அப்படத்தில் தனுஷ், ஷெரின் ஆகியோருடன் நடித்த அவர், பின்னர் 'ஜங்ஷன்' (2002), 'சிங்காரா சென்னை' (2004), 'பொன் மேகலை' (2005) போன்ற படங்களில் நாயகனாகவும், பல்வேறு படங்களில் துணை வேடங்களிலும் நடித்தார். மலையாளத் திரையுலகிலும் அவர் பணியாற்றினார்.
நடிகராக மட்டுமின்றி, பல முன்னணி நாயகர்களுக்குக் குரல் கொடுத்த ஒரு திறமையான டப்பிங் ஆர்டிஸ்டாகவும் அபினய் திகழ்ந்தார்.
English Summary
Liver Diseases thulluvatho ilamai actor Abhinay passes away