கண் இமைக்கும் நேரத்தில் ஒரு உயிர் பிரிந்தது...! - தண்ணீர் வாளியில் விழுந்து குழந்தை உயிரிழந்த சோகம்...!
life lost blink eye Tragedy child who died after falling bucket water
சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பில் வசித்து வருபவர் முனீர் பாஷா. இவரது மனைவி ரேஷ்மா பானு. தம்பதியருக்கு முகமது அர்ஷத் மற்றும் ஒரு வயதான முகமது பகத் என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர். இவர்களுடன் ரேஷ்மா பானுவின் தங்கை ஷபானா பானுவும் ஒரே வீட்டில் வசித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று காலை முனீர் பாஷா, தனது மூத்த மகன் முகமது அர்ஷத்தை அழைத்துக்கொண்டு வேலைக்குச் சென்றுள்ளார். பின்னர், ஒரு வயது குழந்தையான முகமது பகத்தை கவனித்துக்கொள்ளுமாறு தங்கையிடம் கூறிவிட்டு, கணவருக்கு உணவு கொண்டு செல்ல ரேஷ்மா பானு வெளியே சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், ஷபானா பானு குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு சிறிது நேரம் கழிவறைக்கு சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, அருகிலிருந்த குளியலறையில் தண்ணீர் நிரம்பிய வாளிக்குள் முகமது பகத் தலைகுப்புற விழுந்து அசைவின்றி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக குழந்தையை தூக்கிக்கொண்டு திருவொற்றியூரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், குழந்தையை பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து எண்ணூர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு கண நேர அலட்சியத்தில் நிகழ்ந்த இந்த பரிதாப சம்பவம், அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
English Summary
life lost blink eye Tragedy child who died after falling bucket water