சுற்றுச்சூழலை பாதுகாப்போம்.. துணிகள் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம்!
Lets protect the environment Awareness meeting about waste collection
வெலிங்டன் கண்டோண்மென்ட் சார்பில் கிராம பகுதிகளில் சுற்றுச்சூழலை பாதுகாப்போம் மற்றும் உபயோகப்படுத்தப்பட்ட பொருட்கள் துணிகள் சேகரிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
பிளாஸ்டிக் மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து,வெலிங்டன், கண்டோன்மென்ட் வாரியம் சார்பில், பிளாஸ்டிக் ஒழிப்பு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, மின்னணு கழிவு பொருட்கள் சேகரிப்பு,உபயோகமற்ற உலோக பொருட்கள் சேகரிப்பு,உபயோகபடுத்தப்பட்டு தேவை இல்லாத பழைய துணிகள் சேகரிப்பு இவற்றை குறித்து கிராம பகுதிகள்,மக்கள் கூடும் இறைவழிபாடு பகுதிகள்,கோவில், தேவாலயங்கள், மசூதி,சமுதாயக் கூடம்,கடைவீதி சுற்றுலாதளம் பள்ளி,கல்லூரி பேருந்து நிறுத்தம்,போன்ற பகுதிகளில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து வெலிங்டன் கண்டோன்மென்ட் முதன்மை நிர்வாக அதிகாரி வினித் பாபா சாகிப் லோட்டே அவர்களின் ஆணைக்கிணங்க கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள சின்ன வண்டிசோலை கிராமத்தில் வெலிங்டன் கண்டோண்மென்ட் முன்னாள் துணை தலைவர் வினோத்குமார், நியமன உறுப்பினர் ஷிபா அவர்கள் தலைமையில் பள்ளி குழந்தைகள் மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டு ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் மின்ணனு கழிவுகள் வீட்டில் உபயோகபடுத்திய தேவையில்லாத உலோக பொருட்கள் மற்றும் தேவையில்லாத இரும்பு பொருட்கள் தகர பொருட்கள் மற்றும் வீட்டுக்கு உபயோக மற்ற பொருட்களை தெருவிலோ அல்லது கண்ட இடங்களில் வீசி விடாத படிக்குக்கும் மற்றும் உபயோக படுத்திய உடைகளை மக்களே நன்றாக துவைத்து மற்றவர்களுக்கு உபயோக படுத்தும் விதத்தில் அதனை வீடு தேடி வாங்கி கொள்ளும் விதமாகவும் கண்டோன்மெண்ட் நிர்வாகத்தால் அங்கிகரிக்கப்பட்டவர்களால் அதனை வாங்கும் விதமாகவும் மற்றும் உபயோக மற்ற உலோக பொருட்களை பெற்று கொண்டு அதற்கான முறையான பணத்தை கொடுக்கும் வண்ணமாக அங்கிகரிக்க பட்ட பழைய பொருட்கள் வாங்கும் வியாபாரிகளை கொண்டு இந்த முறையை செயல்படுத்தும் விதமாக முதன் முறையாக சின்ன வண்டிசோலை பகுதியில் இந்த நிகழ்ச்சி துவக்கி வைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பின்பு இந்த பகுதியில் வசிக்கும் பொது மக்களிடம் எலோத்ஸ் ஹராஸ்டே - 75.600 கிலோ, இரும்பு கழிவு142.250 கிலோ, பிளாஸ்டிக் கழிவுகள் -2.500 கிலோ,இ.மாஸ்டே - 17.560 கிலோ,காகித கழிவு - 21.300 கிலோ, வாங்கப்பட்டன.
பிறகு சுகாதார ஆய்வாளர் கிராமப் பகுதியை எவ்வாறு தூய்மையாக வைத்து இருக்க வேண்டும் என்று கிராம மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் வெலிங்டன் கண்டோண்மென்ட் அலுவலக சுகாதார கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர்கள் பழனிசாமி,பூரணி, மற்றும் கண்டோன்மெண்ட்தூய்மை பணியாளர்கள் ஊழியர்கள் அந்த ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
English Summary
Lets protect the environment Awareness meeting about waste collection