முன் விரோதம்.! ஆத்திரத்தில் பெண்ணை தாக்கிய கூலி தொழிலாளி கைது.!
Laborer arrested for assaulting woman in Dindigul
திண்டுக்கல் மாவட்டத்தில் முன்விரோதத்தில் பெண்ணை தாக்கிய கூலித் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள கொழிஞ்சிபட்டி பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி நவநீதன் (30). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த காமக்காள்(55) என்பவருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த நவநீதன் காமக்காளை தாக்கியுள்ளார். இதில் பலத்தால் காயமடைந்த நிலையில், காமக்காளை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சாணார்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், நவநீதனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Laborer arrested for assaulting woman in Dindigul