அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா? மத்திய அமைச்சர் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, அதிமுக - பாஜக இடையேயான உறவு சுமூகமாக உள்ளதாக, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் பாஜகவின் தலையீடு இருப்பதாக அதிமுகவின் மூத்த தலைவர்கள் மறைமுகமாக விமர்சித்து வந்தனர்.

மேலும், பாஜகவின் முக்கிய புள்ளிகள் அதிமுகவில் இணைந்ததால், பாஜகவின் நிர்வாகிகளும் அதிமுகவை கடுமையாக விமர்சிக்க தொடங்கினர்.

இதன் காரணமாக அதிமுக-பாஜக கூட்டணி மீண்டும் தொடருமா? என்ற சந்தேகம் எழுந்து வந்தது. இந்த நிலையில் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் என்று அதிமுகவின் நிர்வாகிகளும், பாஜக நிர்வாகிகளும் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் முன்னாள் மாநில தலைவரும், மத்திய இணை அமைச்சருமான முருகனிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்க்கு அவர், "அதிமுக - பாஜக கூட்டணி உறவு சுமுகமாக உள்ளது. எந்த சிக்கலும் இல்லை. இதை எங்கள் மாநில தலைவரும் (அண்ணாமலை) ஏற்கனவே தெளிவுப்படுத்திவிட்டார்.

வரும் மக்களவை பொது தேர்தலுக்கு பாஜக முழு வேகத்தில் தயாராகிக் கொண்டிருக்கிறது. பூத்களை வலிமைப்படுத்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது" என்றார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

L Murugan Say About ADMK And BJP Alliance 2023


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->