சாகும்வரை ஆயுள் தண்டனை... குன்றத்தூர் அபிராமி எடுத்த அதிரடி முடிவு! காவல்துறைக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


கள்ளகாதலனுக்காக தனது குழந்தைகளை கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற குன்றத்தூர் அபிராமி, தண்டனையை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

குன்றத்தூர் அருகே வசித்த விஜய் (30), மனைவி அபிராமி (25), மகன் அஜய் (7), மகள் கார்ணிகா (4) ஆகியோருடன் வாழ்ந்து வந்தார். டிக்டாக் மூலம் பிரபலமான அபிராமி, அருகிலிருந்த பிரியாணி கடை ஊழியர் மீனாட்சி சுந்தரத்துடன் பழகி, பின்னர் முறைகேடான உறவில் ஈடுபட்டார். உறவு வெளிச்சத்துக்கு வந்ததால், இருவரும் 2018ல் விஜயையும், குழந்தைகளையும் கொன்று தப்பிச் செல்ல திட்டமிட்டனர்.

இதன்படி, அபிராமி, விஜய் மற்றும் குழந்தைகளின் உணவில் தூக்க மாத்திரை கலந்தார். அதில் கார்ணிகா உடனே உயிரிழந்தார். மறுநாள், விஜய் வேலைக்கு சென்ற பிறகு, அபிராமி மயக்க நிலையில் இருந்த அஜய்யை கழுத்து நெறித்து கொன்றார். பின்னர் மீனாட்சி சுந்தரத்துடன் தெற்குப் பயணம் மேற்கொண்டார்.

வீடு திரும்பிய விஜய், குழந்தைகள் இறந்திருந்ததை கண்டு போலீசில் புகார் செய்தார். விசாரணையில், அபிராமி சம்பந்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டு, அவரையும், மீனாட்சி சுந்தரத்தையும் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மகிளா நீதிமன்றம், இருவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை ரத்து செய்யவும், தண்டனையை நிறுத்தவும் அபிராமி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். விசாரணை நடத்திய நீதிபதிகள் காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kuntrathur abirami case chennai hc


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->