குன்றத்தூர் கொலைகாரி அபிராமி நினைவிருக்கா! பிரியாணிக்காக கள்ளக்காதல்! 2 குழைந்தைகள் கொலை வழக்கில் தீர்ப்பு!
kundrathur abirami case judgement
2018ஆம் ஆண்டில் தமிழகத்தை அதிரவைத்த குன்றத்தூர் இரு குழந்தைகள் கொலை வழக்கில், தாய் அபிராமி குற்றவாளி என காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
கள்ளகாதலுக்காக அபிராமி தன்னுடைய இரு குழந்தைகளுக்கும் பாலில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற வழக்கு விசாரணை முடிவில் நீதிமன்றம், அபிராமி குற்றவாளி என்பதை உறுதி செய்த நிலையில், தண்டனை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த விஜய் என்பவர், சென்னையில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார். குடும்பத்துடன் குன்றத்தூர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த அவர், மனைவி அபிராமி மற்றும் குழந்தைகள் அஜய் (7), காருனிகா (4) உடன் வாழ்ந்தார்.
சம்பவம் நடந்த அன்று வழக்கம் போல வீடு திரும்பிய விஜய், கதவு வெளியே பூட்டப்பட்டதையும், உள்ளே சென்று பார்த்தபோது குழந்தைகள் உயிரிழந்த நிலையில் கிடந்ததையும் கண்டதும் அதிர்ச்சி அடைந்தார். அப்போது அபிராமி இல்லாதது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
பின்னர், பிரியாணி கடை நடத்தும் மீனாட்சி சுந்தரத்துடன் அபிராமிக்கு ஏற்பட்ட நெருக்கம், இந்த பயங்கர முடிவுக்குக் காரணம் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
மேலும், விஷமுள்ள பாலை குழந்தைகளுக்கு கொடுத்து கொன்றுவிட்டு, அபிராமி கேரளாவில் தலைமறைவான நிலையில் கைது செய்யப்பட்டார். இன்று நீதிமன்றம் அவரை குற்றவாளி என அறிவித்துள்ளது.
English Summary
kundrathur abirami case judgement