கும்பகோணம் இளைஞரின் தலை துண்டிப்பு: உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி இளைஞர்., திருப்பூரில் நடந்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் : நல்லூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட செரங்காடு பகுதியில், நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் ஒருவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தார். அவரின் மார்பு, கை, கால்கள் உள்ளிட்ட பகுதிகளில் அரிவாளால் வெட்டிய காயங்கள் இருந்துள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் திருச்சியை, ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் என தெரியவந்தது.

இதனையடுத்து, அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், ரஞ்சித் அளித்த தகவலின்படி, அவருடைய நண்பர் கும்பகோணத்தை சேர்ந்த சதீஷ் என்பவரை காட்டுப் பகுதியில் வைத்து கத்தி மற்றும் அரிவாளால் தாக்கி கொண்டிருப்பதாகவும் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

அந்த காட்டுப்பகுதியில் சென்று தேடியபோது அங்கு தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சதீஷ் சடலமாக கிடந்துள்ளார். இதனையடுத்து சதீஷின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், ரஞ்சிதா அளித்த வாக்குமூலத்தின்படி, நேற்று இரவு இருவரும் நடந்து வரும் போது, 5 பேர் கொண்ட கும்பல் கத்தியை காட்டி வழிப்பறி செய்ய முயற்சிதாகவும், அப்போது ரஞ்சித் ஓட முயற்சித்ததாகவும்,, சதீஷை மட்டும் அருகிலிருந்த காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று அவரை அந்த மர்ம கும்பல் கத்தியால் தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

வழிபறி காரணமாக இந்த கொலை நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் முன்பகை காரணமாக இந்த கொலை நடந்ததா என்பது குறித்து நல்லூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும்,சதீஷ்-ன் துண்டிக்கப்பட்ட தலை இதுவரை கிடைக்கவில்லை என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kumbakonam young man murder in tirupur


கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?Advertisement

கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?
Seithipunal