ஸ்டாலின் மவுனத்தில் சந்தேகம்! சிலிண்டர் விவரத்தை வெளியிடுங்க! - Seithipunal
Seithipunal


கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது "கோவை வெடி விபத்து தொடர்பாக தமிழக அரசு எச்சரிகையாக இருந்திருக்க வேண்டும். இந்த வெடி விபத்து விவகாரத்தில் மர்மங்கள் நிலைக்கின்றன. காவல்துறை இனி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கோவை மாநகர் தீவிரவாதிகளின் புகலிடமாக மாறி இருக்க காரணம் என்ன? கோவையில் சதி செய்ய காரணம் ஒட்டுமொத்த தமிழக பொருளாதாரத்தையும் முடக்கி விட வேண்டும் என்பதே ஆகும். 

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் என்ஐஏ கேட்பதற்கு முன்பே ஒப்படைக்க என்ன காரணம்? இந்த வெடிப்பு சம்பவத்தை அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டித்து இருக்க வேண்டும். இது அவர்களின் தார்மீக பொறுப்பாக இருந்தும் யாரும் கண்டிக்கவில்லை. தமிழக முதல்வர் கூட இந்த சம்பவத்தை கண்டிக்கவில்லை. இந்த சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு ஸ்டாலின் வந்திருக்க வேண்டும். மக்களுக்கு பாதுகாப்பு உத்திரவாதத்தை அளிக்கும் வகையில் செயல்பட்டு இருக்க வேண்டும். ஆனால் முதல்வரின் இந்த மவுனம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மக்கள் அச்சத்தோடு வாழ்வது ஜனநாயக நாடே இல்லை. தீவிரத்திற்கு எதிராக வெளிப்படையாக செயல்பட வேண்டும். காவல் நிலையங்களின் எண்ணிக்கை அதிகரித்தால் மட்டும் போதாது காவல்துறையினரை சுதந்திரமாக செயல்பட வைக்க வேண்டும். 

உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் கோவை சம்பவம் குறித்து விசாரணை கமிஷன் அமைத்து காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும். மாநில சுய ஆட்சியை பற்றி பேசும் ஸ்டாலின் ஏன் என்ஐஏ-விடம் வழக்கை கொடுத்தார்? வெடித்த. சிலிண்டரை ஏன் காண்பிக்கவில்லை? காவல்துறையினர் வெளிப்படையாக செயல்பட வேண்டும். வெடித்த சிலிண்டரின் விவரங்களை வெளியிட வேண்டும். தமிழக அமைச்சர் ஒருவர் கூட சம்பவம் நடந்த அன்று வரவில்லை. ஐந்து நாட்கள் கழித்து சம்பவம் குறித்து பேசுவதற்கு என்ன காரணம்? என தமிழக தமிழக அரசிடம் கிருஷ்ணசாமி சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Krishnaswami conduct pressmeet about coimbatore car incident


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->