யானை மிதித்து 2 விவசாயிகள் பரிதாப பலி.. கிருஷ்ணகிரியில் சோகம்.! - Seithipunal
Seithipunal


இருவேறு பகுதியில் யானை மிதித்து 2 விவசாயிகள் ஒரே மாவட்டத்தில் பரிதாபமாக பலியான சோகம் நடந்துள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையோர பகுதிகளில் யானைகள் அவ்வப்போது உலா வருவது வழக்கம். சில நேரங்களில் மனிதர்கள் காடுகளில் அடைக்கலம் புகுந்து வாழ்ந்து வரும் பகுதிகளுக்கும் வருகை தருகிறது. 

அங்குள்ள விவசாய நிலங்களில் விளைந்திருக்கும் பொருட்களை சாப்பிட்டும், நீர் நிலைகளில் தண்ணீர் குடித்தும் தங்களின் பசி மற்றும் நீர்த்தேவையை பூர்த்தி செய்கிறது. இவ்வாறான பல நேரங்களில் யானைகள் மக்களை அச்சுறுத்தாமல் இருந்தாலும், சில நேரங்களில் சோக சம்பவங்கள் நடக்கிறது. 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனஹள்ளி நேரழகிரி பகுதியை சார்ந்த விவசயி நாகன். இவர் விவசாய நிலத்திற்கு சென்று கொண்டு இருக்கையில், அவ்வழியாக இடைமறித்த யானையால் மிதித்து கொல்லப்பட்டுள்ளார். இதனைப்போன்று, அங்குள்ள சிரனப்பள்ளி பகுதியை சார்ந்த விவசாயி சந்திரன், இரவுநேர காவலுக்கு சென்றிருந்த நிலையில், அவரும் யானை மிதித்து கொல்லப்பட்டார். 

இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சோகத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும், யானைகளை வனத்துறையினர் காட்டிற்குள் விரட்டி விட வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Krishnagiri Veppanahalli And Neralagiri Area Elephant Attack 2 Farmers Died


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->