நேருக்கு நேர் மோதிய கார்கள்.. அப்பளம் போல நொறுங்கிய சோகம்.. 2 பேர் பரிதாப பலி.! - Seithipunal
Seithipunal


சூளகிரி அருகே நடந்த கோர விபத்தில், 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இரண்டு கார்கள் அப்பளம் போல நொறுங்கியது.

திருப்பத்தூர் மாவட்டத்தை சார்ந்தவர் கோபி (வயது 34). இவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் இருந்து, திருப்பத்தூர் நோக்கி காரில் வந்துகொண்டு இருந்துள்ளார். இந்த கார் நேற்று காலை 07:45 மணியளவில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூளகிரி தேசிய நெடுஞ்சாலை காட்டுப்பகுதி அருகே வந்துள்ளது. 

இதன்போது, அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்றுகொண்டு இருந்த கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி சென்றுள்ளது. எதிர்திசை சாலையில் நுழைந்த கார், மற்றொரு காருடன் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியது. 

இந்த விபத்தில், எதிர்திசை காரில் பெங்களூரை சார்ந்த சுமந்த் (வயது 30) என்பவர் காரில் பயணித்த நிலையில், இரண்டு கார்களும் அப்பளம் போல நொறுங்கியது. இந்த விபத்தில், கோபி மற்றும் சுமந்த் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர்.

இந்த விபத்து தொடர்பாக சூளகிரி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, காவல் ஆய்வாளர் மனோகரன் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து கோபி மற்றும் சுமந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Krishnagiri Shoolagiri Near NH Car Accident 2 Died Police Investigation


கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,Advertisement

கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,
Seithipunal