கிருஷ்ணகிரி பள்ளி மாணவி விவகாரம்: முதற்கட்ட அறிக்கை தாக்கல்! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி, தனியார் பள்ளியின் என்சிசி முகாமிற்கு சென்ற 13 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பள்ளியின் முதல்வர், ஆசிரியர், பள்ளி தாளாளர், பயிற்சியாளர் உட்பட ஏழு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

முக்கிய குற்றவாளியான என்சிசி பயிற்சியாளரும், நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியுமான சிவராமனை நேற்று தனிப்படை அமைத்து போலீசார் கைது செய்தனர். 

மேலும், காவல்துறை விசாரணையில் மேலும் 13 மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியான நிலையில், பள்ளியில் நடந்தது போலியான என்.சி.சி கேம்ப் என தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட போலி என்.சி.சி மாஸ்டர் சிவராமனிடம் இதுகுறித்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், முதற்கட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நபர்கள், வேறு மாவட்டங்களில் இது போன்று போலியாக என்.சி.சி முகாம்களை நடத்தி இருக்கிறார்களா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மற்ற மாவட்டங்களில் இது போல் மாணவிகளுக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக கல்வித்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த விசாரணையில் முகாந்திரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், இந்த வழக்கின் விசாரணை விரிவுபடுத்தப்படும் என்றும் கல்வித் துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பெற்றோர், மாவட்ட கல்வி அலுவலரின் அனுமதியின்றி முகாம் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, தனியார் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதுகுறித்த சுற்றைக்கையில், "தனியார் பள்ளிகளில் எந்தவித முகாம் நடத்தினாலும், பெற்றோரின் அனுமதியும் , மாவட்ட கல்வி அலுவலரின் அனுமதியும் பெற வேண்டும். அனுமதியின்றி முகாம் நடத்தும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மாநில அமைப்பு மூலம் முறையாக பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லாமல் எந்தவொரு அமைப்பும் பள்ளியில் செயல்படக்கூடாது. மாணவர்களுக்கு ஆண் ஆசிரியர்கள் மூலம், மாணவிகளுக்குப் பெண் ஆசிரியைகள் மூலம் பயிற்சிகள் வழங்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Krishnagiri school child abuse case


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->