தமிழகத்தின் சிறந்த முதல்வர், அழகான முதல்வர் நீங்க தான்.. தமிழக முதல்வரை புகழ்ந்து தள்ளிய தாய்-மகள்.!! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் " மக்களை தேடி மருத்துவம் " என்ற திட்டத்தை கிருஷ்ணகிரி சென்று தொடங்கி வைத்தார். இதன்பின்னர், காரில் ஓசூர் சென்று கொண்டு இருக்கையில், ஓசூர் உழவர் சந்தை அருகே ரம்யா என்ற பெண் முதல்வர் மு.க ஸ்டாலினிடம், " சார் முகக்கவசத்தை கழற்றுங்கள், உங்களின் முகத்தை பார்க்க வேண்டும் " என்று தெரிவித்தார். 

இதனைக்கேட்ட தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினும் முகத்தில் புன்னகையை வெளிப்படுத்தியவாறு முகக்கவசத்தை கழற்றினார். இதன்போது, பெண்மணி ஒரு பேப்பரையும் தனது கோரிக்கை மனுவாக வழங்கினார். இந்த கடிதத்தில் முதல்வரை வாழ்த்திய வாசகம் மற்றும் பெண்ணின் செல்போன் எண் இடம்பெற்று இருந்தது. 

இதன்பின்னர் முதல்வர் சென்னை புறப்பட்டு சென்ற நிலையில், முதலமைச்சர் அலுவலகத்தில் அவரின் உதவியாளர்கள் பெண்ணின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு  பேசியுள்ளார். முதல்வர் உங்களிடம் பேச இருப்பதாக கூறவே, மகிழ்ச்சியடைந்த ரம்யா முதல்வருடன் உரையாடினார். வீடியோ கான்பரன்ஸ் வழியாக ரம்யாவும், அவரது மகள் ஹரிணியும் பேசினார்கள். 

இந்த உரையாடலில், ரம்யா பேசுகையில், " வணக்கம் சார். தமிழகத்தில் சாலை வசதியும், தண்ணீர் வசதியும் முழுமையாக செய்துகொடுத்தால் தமிழகம் வளர்ச்சியடையும். நீங்கள் மக்களின் முதல்வராக இருக்கிறீர்கள். எளிமையுடன் உங்களுடன் பேசலாம் என்று நினைத்து பார்க்கவே இல்லை. உங்களின் ஆட்சி சிறப்பாக உள்ளது. உங்களின் ஆட்சி தொடர வேண்டும். முதல்வராக நீங்கள் நீண்ட வருடம் இருக்க வேண்டும் " என்று பேசினார். 

இதற்கு பதிலளித்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், நன்றி என்று தெரிவிக்க, ரம்யா தனது தந்தையிடம் பேச முடியுமா? என கோரிக்கை வைத்தார். அவர் அருகில் இருக்கிறாரா? என கேட்கவே, அவர் ஊரில் இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் வந்ததும் போன் செய்யுங்கள் பேசுகிறேன் என்று தெரிவித்த முதல்வரை, புகழ்ந்து தள்ளிய ரம்யா மிக்க நன்றி சார். சூப்பரா இருக்கிறீர்கள், வயதானாலும் அழகாகவும், ஸ்டைலாகவும் இருக்கிறீர்கள் என்று தெரிவித்தார்.

பின்னர், ரம்யாவின் மகள் விஷ்மயா ஹரிணி பேசுகையில், சார் நலமுடன் இருக்கிறீர்களா?. நான் பனிரெண்டாம் வகுப்பு படிக்கிறேன், பள்ளியை விரைந்து திறங்கள் என்று கோரிக்கை வைத்தார். மேலும், கடந்த இரண்டு வருடமாக ஆன்லைன் வழியாக படித்து வருகிறேன் என்றும், வீட்டிலேயே இருக்க முடியவில்லை, இணையவழியில் சரியாக படிக்க இயலவில்லை, பள்ளியை விரைந்து திறங்கள் என்று கோரிக்கை வைத்தார். 

இதனைக்கேட்ட தமிழக முதல்வர் நன்றாக படிக்க வேண்டும் என்று ஆலோசனை கூறி, கொரோனா பரவல் குறைந்ததும் பள்ளியை திறக்கலாம் என்று உறுதி அளித்து பேசினார். இது தொடர்பான உரையாடல்களின் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Krishnagiri Hosur Woman Ramya and his Daughter Harshini Speech with TN CM MK Stalin


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->