கோவையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்! தொடர் கதையாகும் யானைகளின் உயிரிழப்பு!  - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தாக்கி, ரயில் மோதி, சமூக விரோதிகளின் தாக்கதலால் யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களில் பல்வேறு சம்பவங்களில் யானைகள் அடுத்தடுத்து உயிர் இருந்து வரும் சம்பவங்கள் குறித்த  செய்திகள் தொடர்கதையாகி வருகிறது.

அண்மையில் கோவை, காரமடை பகுதியில் வாயில் நாட்டு வெடித்து பெண் யானை ஒன்று ஒரு மாதம் உணவு, தண்ணீர் அருந்த முடியாமல் உயிரிழந்த சோக சம்பவம் அரங்கேறியது.

அதனைத் தொடர்ந்து தர்மபுரி அருகே உணவு தேடி ஊருக்குள் வந்த காட்டு யானையை பொதுமக்கள் விரட்டும் போது, தாழ்ந்து சென்ற மின் கம்பியில் உரசி, சம்பவ இடத்திலேயே யானை பலியாகிய சம்பவமும், அது குறித்த காணொளியும் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கோவை அருகே உணவு தேடி ஊருக்குள் வந்த காட்டு யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்து உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் பூச்சியூர் பகுதியில் உணவு தேடி ஊருக்குள் வந்த காட்டு யானை, நேற்று இரவு மின்சாரம் தாக்கி உயிரிழந்து உள்ளது.

இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் கிடைத்து வந்த வனத்துறையினர் யானை உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kovai poochur elephant death


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->