#கோவை | 7 மாதக் குழந்தையின் மூச்சுக்குழாய்யில் சிக்கிய பிளாஸ்டிக் துண்டு! உயிரை காப்பற்றிய மருத்துவர்கள்! - Seithipunal
Seithipunal


பொள்ளாச்சி அருகே 7 மாதக் குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கிய பிளாஸ்டி துண்டை, கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றி உயிரைக் காப்பாற்றிய நெகிழ்ச்சை சம்பவம் அறநெக்ரியுள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள நெகமத் பகுதியை சேர்ந்த 7 மாத ஆண் குழந்தைக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, குழந்தையின் பெற்றோர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 

குழந்தையின் மூக்கில் உள்நோக்கி குழாய் செலுத்தி மருத்துவர்கள் சோதனை செய்த போது, மூச்சுக் குழாயில் உடைந்த பிளாஸ்டிக் துண்டு சிக்கி இருப்பது தெரியவந்தது.

உடனடியாக மருத்துவர்கள், குழந்தைக்கு மூச்சுக்குழாய் உள்நோக்கி கருவி மூலம் பிளாஸ்டிக் பாகத்தை அகற்றி குழந்தையின் உயிரை கைப்பற்றியுள்ளனர்.

அறுவை சிகிச்சை இல்லாமல் குழந்தியின் உயிரை காப்பாற்றியது குறித்து மருத்துவமனையின் டீன் மருத்துவர் நிர்மலா தெரிவிக்கையில், "எங்கள் மருத்துவ குழுவினர் வெற்றிகரமாக இந்த சிகிச்சையை மேற்கொண்டு உள்ளனர்.

விளையாட்டு பொருளின் உடைந்த பிளாஸ்டிக் பாகத்தை கவனிக்காமல் இப்படியே விட்டிருந்தால் குழந்தையின் நுரையீரல் பாதித்து உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும். 

பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டால் உடனடியாக  மருத்துவரை அணுக வேண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kovai pollachi 7 month baby case


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->