#தமிழகம் | 16 வயது பள்ளி சிறுமியை நிர்வாண வீடியோ கால் பேசசொல்லிய கொடூரம்.! - Seithipunal
Seithipunal


கோவை அருகே உள்ள கோவில்பாளையத்தைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் கடந்தாண்டு 10-ம் வகுப்பு படித்தபோது இவரது வகுப்பில் படித்த மாணவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்த மாணவர்  மாணவியிடம் செல்போனில் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தார். 

இந்த நிலையில் வீடியோ காலில் பேசும்போது அந்த சிறுவன் மாணவியை நிர்வாணமாக பார்க்க விரும்புவதாக தெரிவித்தார். ஆனால் மாணவி இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். ஒருகட்டத்தில் சிறுவனின் தொல்லை தாங்காமல் மாணவி நிர்வாணமாக வந்து வீடியோ காலில் பேசி உள்ளார். 

அந்த காட்சிகளை சிறுவன் செல்போனில் பதிவு செய்து வைத்துக்கொண்டு மாணவியை மீண்டும் நிர்வாணமாக வீடியோ காலில் பேசுமாறு மிரட்டியுள்ளார். இதனையடுத்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் நேர்ந்ததை கூறி கதறி அழுதுள்ளார். 

இதன் பின்னர், அவரது பெற்றோர் கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் அந்த சிறுவன் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kovai kovilpalaiyam school girl video call case


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->