கூவம் - அடையாற்றை இணைக்கும் பக்கிங்காம் கால்வாயில் தூர்வாரும் பணி - ஆலோசனை செய்த அமைச்சர்கள்! - Seithipunal
Seithipunal


நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் சென்னை, அடையாறு - கூவம் ஆற்றை இணைக்கும் பக்கிங்காம் கால்வாயில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் புனரமைத்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இன்று (30/01/2023) சென்னை, தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் தலைமையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், சென்னை, அடையாறு கூவம் ஆற்றை இணைக்கும் பக்கிங்காம் கால்வாயில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் புனரமைத்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, சுற்றுலா பொருட்காட்சி திடல் பின்பிருந்து மயிலாப்பூர் வரையிலான அடையாறு-கூவம் ஆற்றை இணைக்கும் பக்கிங்காம் கால்வாயினை புனரமைப்பு செய்து, அகலப்படுத்தி, கரையோரப் பகுதிகளில் உள்ள சுற்றுப் பகுதிகளை தூய்மைப்படுத்தி அழகுபடுத்துதல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்தில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, இ.ஆ.ப., சென்னை நதிகள் சீரமைப்பு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் ஸ்வர்ணா, இ.ஆ.ப., சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் கிர்லோஷ்குமார், இ.ஆ.ப., தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் கோவிந்த ராவ், இ.ஆ.ப., தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் டாக்டர். ஜெயந்தி, இ.ஆ.ப., சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர்  அமிர்தவல்லி இ.ஆ.ப. மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Koovam adaiyaru river issue


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->