காதலை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் வெளிப்படுத்திய வாலிபர் கொலை - தெலுங்கானாவில் பரபரப்பு.!!
man murder for love issue in telungana
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ரேசப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் எதிருகட்ல சதீஷ். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அவர்களது காதல் விவகாரம் குடும்பத்தினருக்கு தெரிய வர பெண் வீட்டார் சதீசை அழைத்து கண்டித்து உள்ளனர்.
மேலும், அந்த பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடும் பணியையும் தீவிரமாக நடத்தினர்.
இந்த நிலையில் சதீஷ் அந்த பெண்ணை தான் காதலிப்பதாகவும், பெண் கேட்டு யாரும் வர வேண்டாம் என்றும் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்தார். இது பெண் வீட்டாருக்கு மேலும் ஆத்திரத்தை கிளப்பியது.

இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பெண்ணின் உறவினர்கள் அந்த வாலிபரை அடித்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
man murder for love issue in telungana