வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொலையில் முடிந்த கோடம்பாக்க சம்பவம் .! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள  கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் 9-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 40). இவர், கோடம்பாக்கத்திலேயே ஒரு கடையில் தையல்காரராக பணியாற்றி வந்தார். இவருடன் கோடம்பாக்கம் சிவன் கோவில் தெருவைச் சேர்ந்த மாதவன் என்பவரும் தையல்காரராக பணிபுரிந்து வந்தார்.

இதையடுத்து ,நேற்று முன்தினம் கடையில் பணியாற்றி கொண்டிருக்கும்போது, சரவணன் சரியாக துணி தைக்கவில்லை என்று மாதவன் கூறினார். தன்னை குறை கூறியது பொறுக்காததால்  மாதவனுடன், சரவணன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஒருக்கட்டத்தில்  வாக்குவாதம் முற்றிப்போக ஆத்திரமடைந்த மாதவன் அருகே இருந்த கத்திரிக்கோலை எடுத்து சரவணனை குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த  சரவணன் துடிதுடித்து அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள்  கோடம்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். 

இத்தகவலையறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற கோடம்பாக்கம் போலீசார் விசாரித்து  வழக்குப்பதிவு செய்தனர் .மேலும்  சரவணனை கத்திரிக்கோலால் குத்திக்கொலை செய்த மாதவனை கைது செய்து சிறையில் அடைத்து,.கொலைக்கு ஆயுதமாக இருந்த கத்திரிக்கோல் பறிமுதல் செய்யப்பட்டது. 

சாதாரண வாக்குவாதத்தில் தொடங்கி கொலையில் முடிந்த இந்த சம்பவம் கோடம்பாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kodampakkam murder case


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->