முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகத்திற்கு கொலை மிரட்டல்.! தீவிர விசாரணையில் போலீசார்.! - Seithipunal
Seithipunal


அ.தி.மு.க. மாநில அமைப்பு செயலாளராகவும், விழுப்புரம் மாவட்ட செயலாளராகவும் பதவி வகித்து வருபவர் தமிழக சட்டத்துறை முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம். தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வரும் இவர், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சி.வி.சண்முகம் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், சி.வி சண்முகத்திற்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வாட்ஸ்-அப் காலில் அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் சி.வி.சண்முகத்தை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, நானும் வன்னியர் தான், ஏதாநெமிலி கிராமத்தை சேர்ந்த நவநீதன் எனவும் அறிமுகப்படுத்திக் கொண்டார். பின்பு அவர் எங்கள் கிராமத்துக்கு வந்தால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டல் விடுத்துவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து சி.வி. சண்முகத்தின் உதவியாளர் ராஜாராம் ரோசனை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சி.வி.சண்முகத்தை மிரட்டிய நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kill threat to ex minister cv sanmugam


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->