துப்பாக்கியுடன் போங்க! தாக்கினால் சுட்டு பிடிங்க - போலீசாருக்கு ஏ.டி.ஜி.பி உத்தரவு! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம் திருச்சூரில் சமீபத்தில் ரவுடி ஒருவரின் பிறந்த நாளை அவரது ஆதரவாளர்கள் கோலாகலமாக கொண்டாடிய நிகழ்வு, மோதலாக மாறி பரபரப்பை ஏற்படுத்தியது. கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தகராறில் அவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசாரை, அவர்கள் பயங்கர ஆயுதங்களால் தாக்கினர். இதில் சில போலீசார் காயமடைந்தனர். மேலும், போலீஸ் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன.

இந்த அதிர்ச்சிகர சம்பவத்தை அடுத்து, மாநில ஏ.டி.ஜி.பி. வெங்கடேஷ், போலீசாருக்கு கடும் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் தங்களின் உயிர் காக்கும் சூழ்நிலைகளில், துப்பாக்கி பயன்படுத்த போலீசாருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகளை கைது செய்யச் செல்லும் போது போலீசார் துப்பாக்கியுடன் செல்ல வேண்டும். தாக்குதல் அல்லது அதற்கான முன்முயற்சி ஏற்பட்டால், தற்காப்புக்காக துப்பாக்கியை பயன்படுத்த தயங்க வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், குண்டர் வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kerala police Criminals gun


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->