பெண்கள் கழிவறை சுவரில் ஏறி ஊழியர் செய்த கேவலம்: 30-க்கு மேல் அதிர்ச்சி வீடியோக்கள்: பரபரப்பில் பிரபல ஐ.டி. நிறுவனம்..!
Employee in a popular IT company in Bengaluru creates a stir by taking a video on his cell phone in the womens toilet
பெங்களூருவில் உள்ள பிரபல ஐ.டி. நிறுவனமான இன்போசிஸில் பெண்கள் கழிவறையில் நபர் ஒருவர் ரகசியமாக மொபைல் வைத்து வீடியோ எடுத்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஸ்டப்னில் நாகேஷ் மலி (வயது 28) என்பவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிறுவனத்தில் உள்ள பெண்களுக்கான கழிவறைக்கு ஒரு பெண் கம்ப்யூட்டர் என்ஜினீயர் சென்ற போது, பக்கத்தில் உள்ள ஆண் ஊழியருக்கான கழிவறை சுவரில் செல்போன் இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பதறிபோன அந்த பெண் வெளியே ஓடிவந்து பார்த்துள்ளார். அப்போது ஆண்களுக்கான கழிவறைக்கு சென்று பார்த்த போது ஸ்டப்னில் சுவரில் நின்றபடி தனது செல்போன் மூலமாக வீடியோ எடுத்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டதால் உயர் அதிகாரி உள்ளிட்டோர் ஓடி வந்துள்ளனர். அப்போது குறித்த பெண் கம்ப்யூட்டர் என்ஜினீயரிடமும், அதிகாரியிடமும் வீடியோ எடுத்த நபர் மன்னிப்பு கேட்ட்டுள்ளார். இதையடுத்து, அதிகாரியும் அவரை கண்டித்ததுடன், மன்னித்து விட்டுள்ளார்.

ஆனால், இந்த விவகாரம் குறித்து, பெண் என்ஜினீயர் தனது கணவரிடம் கூறியுள்ளார். உடனே பெண்ணின் கணவர் நிறுவனத்திற்கு சென்று ஸ்டப்னில் மீது நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரியுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். அத்துடன் வீடியோ எடுத்த நபரிடம் இருந்து செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த செல்போனை ஆய்வு செய்த போது, 30-க்கும் மேற்பட்ட வீடியோ காட்சிகள் இருந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணையில் பெண்களுக்கான கழிவறையில் அடிக்கடி செல்போனை வைத்து வீடியோ எடுத்து வந்தது தெரியவந்துள்ளது. கைதான ஸ்டப்னிலிடம் எலெக்ட்ரானிக் சிட்டி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Employee in a popular IT company in Bengaluru creates a stir by taking a video on his cell phone in the womens toilet