முன் விரோதம்: 12-ஆம் வகுப்பு மாணவன் அடித்தே கொலை: ஈரோட்டில் 02 மாணவர்கள் கைது..!
02 Students Arrested for Beating to Death of 12th Class Student in Erode
ஈரோட்டில் 12-ஆம் வகுப்பு மாணவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 02 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். ஈரோடு குமலன்குட்டை செல்வம் நகரை சேர்ந்த சிவா-சத்யா தம்பதியினரின் மகன் ஆதித்யா (17). இவர், குமலன்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 02 படித்து வந்தார். ஆதித்யா நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு செல்வதாக கூறி சென்றவர், பள்ளிக்கு செல்லவில்லை. இதையடுத்து, நேற்று மாலை பள்ளிக்கு எதிரே ஆதித்யா சுயநினைவின்றி கிடந்துள்ளார்.
இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் ஆதித்யாவை உடனடியா மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் ஆதித்யாவை பரிசோதித்து பார்த்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த ஆதித்யாவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுத்தத்துடன், மகனின் உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லக்கூடாது என கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து ஈரோடு டவுன் டிஎஸ்பி முத்துக்குமரன் தலைமையில், ஈரோடு வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்பிரபு, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுராதா ஆகியோர் தலைமையில் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஆதித்யாவின் பெற்றோர் ஆதித்யாவின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்ககோரி புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

பின்னர் ஆதித்யாவின் உடலை பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில், ஆதித்யா சக மாணவர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரிவந்துள்ளது. முன்விரோதம் காரணமாக பள்ளிக்கு வெளியே சக மாணவர்களுடன் தகராறு ஏற்பட்டதில் இந்த கொலை நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கொடூர சம்பவத்தில் ஈடுப்பட்ட இரண்டு மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
02 Students Arrested for Beating to Death of 12th Class Student in Erode