கரூர் கூட்ட நெரிசல் காரணத்தை ஆராய 8 பேர் கொண்ட குழ அமைப்பு
Karur traffic congestion An 8member team formed to investigate the cause
கரூர் நெரிசலுக்கான காரணத்தை ஆராய்வதோடு பாதிக்கப்பட்டரோரையும் பாஜக குழு சந்திக்கும் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் நேற்று முன்தினம் பிரசாரம் மேற்கொண்டபோது கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்து உள்ளனர்.ஒற்றைப்படை எண்ணிக்கையில் தொடங்கிய பலி எண்ணிக்கை, படிப்படியாக அதிகரித்து, 41 ஆக உயர்ந்துள்ளது.
கரூரில் நிகழ்ந்த இந்த துயர சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்தநிலையில் கரூர் கூட்ட நெரிசலால் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதனிடையே கரூரில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது.
அதன்படி ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தனது விசாரணையை நடத்தி வருகிறார். இந்தநிலையில், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக ஹேமமாலினி எம்.பி. தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அமைத்துள்ளார் .
இந்த பாஜக குழுவில்அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ்லால், ஸ்ரீகாந்த் ஷிண்டே,அப்ரஜிதா சாரங்கி, ரேகா ஷர்மா, புத்த மகேஷ் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு விரைவில் கரூருக்கு வருகை தர உள்ளதாக கூறப்படுகிறது. கரூர் நெரிசலுக்கான காரணத்தை ஆராய்வதோடு பாதிக்கப்பட்டரோரையும் பாஜக குழு சந்திக்கும் என்று ஜே.பி. நட்டா கூறியுள்ளார்.
English Summary
Karur traffic congestion An 8member team formed to investigate the cause