கரூர்செய்திகள் கவலையளிக்கின்றன: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேதனை!
Karur news is worrisome Chief Minister MKStalins grief
விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளநிலையில் கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் இன்றிரவு கரூர் மாவட்டத்தில் மக்களை சந்தித்து உரையாற்றினார். அப்போது விஜய் வேன் அருகே கட்டுக்கடங்காத கூட்டம் கூடியநிலையில் விஜய் பேசிக் கொண்டிருக்கும்போதே, பெண் ஒருவர் மயக்கம் அடைந்தார். உடனடியாக அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அதனை தொடர்ந்து விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 30-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த நிலையில் சுமார் 10 பேர் உயிரிழந்ததாக அச்சமான செய்தி வெளியாகியுள்ளது. மேலும், பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.விஜய் பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்ட நிலையில், அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் ஆகியோரை உடனடியாக செல்ல முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.இந்த நிலையில் இது தொடர்பாக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,
கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன.கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்களையும் - மாவட்ட ஆட்சியரையும் தொடர்புகொண்டு அறிவுறுத்தியுள்ளேன்.
அருகிலுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களிடமும் போர்க்கால அடிப்படையில் தேவையான உதவியினைச் செய்து தரும்படி உத்தரவிட்டிருக்கிறேன். அங்கு, விரைவில் நிலைமையைச் சீராக்கும் நடவடிக்கைகைளை மேற்கொள்ள ஏடிஜிபி-யிடமும் பேசியிருக்கிறேன்.பொதுமக்கள் மருத்துவர்களுக்கும் காவல் துறைக்கும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன். என தெரிவித்துள்ளார்.
English Summary
Karur news is worrisome Chief Minister MKStalins grief